Date:

தகராறில் பலியான வயோதிப பெண்: யாழில் சம்பவம்

யாழ். நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது தாக்குதலுக்கு இலக்கான 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம்(01) அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தலையில் தாக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் நேற்று(01) முற்பகல் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...