ஜனாதிபதியால் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற வன்முறைகள், கொள்ளைகள், தனிநபர் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவிற்கு ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பீ அலுவிஹார தலைமை தாங்குகிறார்.