ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று நேரத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஷால் தல்துவ தெரிவித்துள்ளார்.