வாகனத்தில் பயணித்த நால்வர் திடீரென சுகவீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை மன்னார், உயிலங்குளம் பகுதியில் பயணித்த குழுவினர் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரும் தலைமன்னார் மற்றும் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26 வயது மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்வைத்த பொலிஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி (JMO) தெரிவித்துள்ளார்.
ஏனைய இருவரும் தேவையான சிகிச்சைக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.