Date:

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கமும் தீர்மானம்

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கும் அவற்றின் விலைகளை பேணுவதற்கும் அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய பொருட்களை அரசாங்கமும் இறக்குமதி செய்து , சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று(31) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் வர்த்தகத்துறை அமைச்சராக செயற்பட்ட போது அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலைகள் பேணப்பட்டு வந்தன. எனினும் காலப்போக்கில் வர்த்தகர்கள் தாம் தீர்மானிக்கும் விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் விலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் , கறுப்பு சந்தைகள் உருவாகும். அத்தோடு பொருட்களும் பதுக்கப்படும். எனவே விலைகளுக்கு கட்டுப்பாட்டினை விதிப்பதால் நுகர்வோர் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...