பம்பலபிட்டி-வஜிரா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி எதிரே பயணித்த வாகனங்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக அந்த கார் வீதியில் குடைசாய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.