Date:

அட்டுலுகம சிறுமி கொலை – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று நீதிமன்றில் வாக்குமூலம் வழங்க உள்ளார்.

சந்தேகநபரை நேற்றைய தினம் பாணந்துறை பிரதான நீதவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க அனுமதி கோரியதற்கமைய, மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் இன்றைய தினம் வாக்குமூலத்தை வழங்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில், சந்தேகநபரை விசேட பாதுகாப்பின்கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை, பொலிஸாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...