முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மீண்டும் இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது.
இந் நிலையில் ஜூன் 2 ஆம் தேதி வியாழன் மற்றும் ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணி வரை 01 மணித்தியால மின்வெட்டு மற்றும் மாலை 06 மணிக்கு பின்னர் இரவு 01 மணித்தியால மின்வெட்டுடன் 02 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, நீர் சேமிப்பு மற்றும் ஜெனரேட்டர்கள் கிடைக்காமை போன்றவற்றின் விளைவாக போதிய உற்பத்தியின்மை காரணமாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபைதெரிவித்துள்ளது.