தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண் தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 29ஆம் திகதி இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணிடம் இருந்த மூன்று தங்க சங்கிலி, மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்பதோடு, மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மூவர் காணாமல் போனமை தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.