Date:

எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல்  முதல்- லிட்ரோ

நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல்  முதல் முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி,  12 தசம் 5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2 தசம் 3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 3 ஆயிரத்து 950 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

இதன்படி,  தர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு குறித்த எரிபொருள் தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில்  இன்று முதக் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ள எரிவாயு சிலிண்டர்களில்  60 வீதமானவை கொழும்பு மற்றும் கம்பஹா  ஆகிய பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வார இறுதியில் 2 ஆயிரத்து 500 மெற்றுக் டொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக  லிட்ரோ நிறுவனம்  மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...