பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
உணவு தட்டுப்பாட்டால் ஏற்படும் இறப்புக்களை தவிர்ப்பதற்கு, பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காணிகள் ஊடாக அவர்கள் விவசாயத்தை மேற்கொள்வதற்கு வழியேற்படும்.
இதன் ஊடாக, எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாட்டை தடுக்க முடியும் என்பதுடன், மலையக மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.