இலங்கையின் பிரபல யூடியூபரான ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பொலிஸார் மற்றும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, இரண்டு மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்து அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரெட்டா எனப்படும் ரணிந்து சுரம்ய சேனாரத்ன, காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.