நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக இவ்வாறு பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 7 ஆயிரம் பேக்கரிகள் காணப்படும் நிலையில், மேலும் சில பேக்கரிகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடரும் நிலையில் எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.