கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிக்கலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது தொழிற்துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் கிடைக்காமை காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.