அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த திருத்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதாகவும், ஏனைய யோசனைகள் குறித்து அராயாப்பட்டு வருவதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.