Date:

பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரு மொடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை (படங்கள்)

கண்டியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.

பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அவர் மயக்கமடைந்ததுடன், பல உபாதைகளுக்கும் உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் பேரதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் நிஹால் வீரசூரியா தெரிவித்தார்.

உலகளவில் இவ்வாறான சம்பவம் இதற்கு முதல் பதிவாகியிருப்பதாக எவ்வித தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...