Date:

காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார்.

 

ஆனால் அவள் வீடு திரும்பவில்லை. கடைக்கு அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் அவர் கடைக்கு வருவதும், மீண்டும் வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது.

 

சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்த நிலையில் பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...