- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கெலனிகம பகுதியில், எரிபொருள் பவுசர் ஒன்றும், லொறி ஒன்றும் நேற்றிரவு (27) விபத்துக்குள்ளாகின.
இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், மாத்தறை நோக்கிய திசையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக, எரிபொருள் பவுசரில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.