அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசிக்க இன்று கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள், “19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தத்தின் வடிவில் மீண்டும் அமுல்படுத்துவது முதல் படியாக இருக்கும்” என ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆவணங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியுமா இல்லையா என்பது குறித்தும் கட்சித் தலைவர்கள் மேலும் ஆலோசிப்பார்கள்.” என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.