13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற எரிபொருள் போக்குவரத்து பௌசர் ஒன்று குருநாகல் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகயுள்ளது.
இதன் காரணமாக பாரியளவு எரிபொருள் வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவையில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் பௌசரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.