நாட்டில் மோட்டார் வாகன பதிவு தற்போது பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையயே புதிய வாகன பதிவுகள் குறைவடைவதற்கான காரணம் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், நாட்டில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் பழைய வாகனங்கள் மாத்திரம் இன்னும் பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
குத்தகை அடிப்படையில் வாகனங்களை கையளிக்கும் போது மோட்டார்; வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானம் கடந்த இரண்டு மாதங்களில் வேமாக குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலகக்கோன் தெரிவித்துள்ளார்.