Date:

சைக்கிளினதும் விலை அதிகரிப்பு?!!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பாலானோர் தற்போது, தங்களது போக்குவரத்துக்காக, சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர்.

 

தற்போதைய நிலையில், சைக்கிள்  ஒன்றின் விலை 40,000 ரூபாவை அண்மித்துள்ளதுடன், அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், தற்போதேனும் சைக்கிள் வண்டி செலுத்துவதை ஊக்குவிக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என மவுண்டன் துவிச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார்.

 

எரிபொருள் நெருக்கடி மற்றும் சைக்கிள் வண்டியின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக, வீடுகளில் இருந்த பழைய சைக்கிள்களை  புதுப்பித்து பயன்படுத்தவும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

எனினும், சந்தையில், சைக்கிள் வண்டி உதிரிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சைக்கிள் வண்டியின் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரிஸ்மி இஸ்மத் தெரிவித்துள்ளார்.

 

சைக்கிளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சைக்கிள் இறக்குமதியின்போது அறவிடப்படும் வரியை, எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள நிவாரண பாதீட்டில் நீக்குமாறு சர்வதேச சைக்கிள் வண்டி ஓட்ட சம்மேளனத்தின் நடுவரான என்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...