திருகோணமலை-கந்தளாய் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில், ஒரு வயது குழந்தையும் தாயும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (25) கந்தளாய் பேராறு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையும் வீதியால் சென்று, கடையொன்றில் நிறுத்த முற்பட்ட போது பின்னால் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான CCTV காணொளி அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.