பிரதமராக பதவியேற்க தான் தற்போதும் தயாராக இருப்பதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிகாரத்துக்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக் கொடுக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது: பொறுப்பை ஏற்க முடியாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை நேர்மையான அமைச்சரவையை ஸ்தாபிக்க தனது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தயாராக உள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஏற்றவகையில் எம்மிடமுள்ள வினைத்திறன்மிக்க செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வைப் பெற்றுத்தரக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராகவுள்ளோம். அதற்குத் தகுதிவாய்ந்த திறமையான குழு எம்மிடம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்