க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் பஸ் ஒன்றுக்கு 100 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்கு 1000 ரூபாய் கப்பம் கோருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, முறையாக டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தர பரீட்சைக்கு பின்னர் பஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.