அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நாட்டின் சுகாதார துறைக்கு ஆதரவாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குழந்தைகளுக்கான சிறுவர் பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ‘குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு’ 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்படும்.
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ‘The National Cancer Hospital’ 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
நாட்டிற்கு தேவைப்படும் இந்த தருணத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் ஸ்ரீலங்கா கிரிக்கட் மிகவும் மகிழ்ச்சியடைகிறது, மேலும் இந்த சவாலான காலகட்டத்தை முறியடிக்க எமது தேசத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் என இலங்கை கிரிக்கெட்டின் கௌரவத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
அத்தகைய உதவியின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நிதி உடனடியாக நன்கொடையாக வழங்கப்படும்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் எமது வீரர்களுக்கு எப்பொழுதும் நிபந்தனையின்றி ஆதரவளித்து வரும் எமது மக்களுக்கு உதவ முன்வருவது ஒரு சிறந்த விளையாட்டு வர்த்தக நாமமாக நாம் கருதுகின்றோம் என இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
நேற்று (மே 24) இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கூட்டத்திலேயே இந்த நன்கொடைக்கு ஒப்புதல் அளித்தது.