‘இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இணைந்த டயனா கமகே உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக’ ராஜித சேனாரத்ன,நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கட்சி தலைவர் சஜித் பிரமேதாஸ, குறித்த செயற்பாட்டை விரைவில் செயற்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது அவசியமானது என செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு சிலர் எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை, அமைச்சு பதவிகளை ஏற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.