இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகை ஔடதங்கள் நாளைய தினம் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
200 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய, 25 டொன்னிற்கும் அதிகமான ஔடத பொருட்களே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள ஔடதங்களினால் நாட்டில் நிலவுகின்ற மருந்து பற்றாக்குறைக்கு இடைக்கால தீர்வொன்றினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.