அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளனர்.
சம்பள பிரச்சினை உ்ள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம் ஜனாதிபதி செயலாகம் வரையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.