Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறும், நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எரிபொருளை பெறுவதற்கு வேறு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும், இடையூறு விளைவிக்கும் அவசியமற்ற நபர்களை வெளியேற்றுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் கொள்கலன்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...