கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் நிலையில், நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒவ்வொரு பரீட்சை மத்திய நிலையத்திலும், பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பதற்காக பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.