மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தொகையினை தரையிறக்கும் பணிகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 92 ரக பெற்றோல், மற்றும் 95 ரக பெற்றோல் ஆகியவற்றின் விநியோகம் ஆரம்பமாகியுள்ளதாகவும், அது தொடர்ந்தும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.