Date:

பாராளுமன்ற உணவகத்தை மூடுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்திலுள்ள உணவகத்தை திறக்கக்கூடாது என இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

53 பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், கையொப்பம் இட்டு தமக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, உணவகத்தை மூடிவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் அதிக செலவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்திற்கு பராளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் மறுப்புத் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டாலும், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான பாராளுமன்ற ஊழியர்களுக்காக பணம் செலவிடப்பட வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...