அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 1 தசம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
UNICEF மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்படக்கூடிய மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருந்துகள் நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் 25 வகையான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை கொள்வனவு செய்ய முடியுமென ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.