Date:

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னணி மத்திய நிலையத்தை அமைக்கும் Samsung Internet 17.0

Samsung Electronics உத்தியோகபூர்வமாக Samsung Internet 17.0ஐ வெளியிட்டது, இது Browserக்கு பாவனையாளரை மையமாகக் கொண்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவரும் மேம்படுத்தல் ஆகும். சமீபத்திய பதிப்பில் Smart anti-tracking மற்றும் HTTPS முன்னுரிமை அணுகல் ஆகியவை இயல்பு நிலையாக அமைக்கப்பட்டுள்ளன, அத்துடன் புதிய வலை அங்கீகரிப்பு முறைகள் உள்ளன. பல்வேறு வகையான பாவனையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இழுத்து Drop tabs மற்றும் மொழிபெயர்ப்பிற்கான கூடுதல் மொழித் தேர்வுகளுடன் ஒட்டுமொத்த பாவனையாளர் அனுபவமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புதிய தலைமுறை Samsung Internetடுடனும், தனியுரிமை அல்லது பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யாத சிறந்த Browser அனுபவத்தை பொறியியலுக்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என Samsung இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kevin SungSu YOU தெரிவித்தார். Samsung Internet 17.0 என்பது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் விளைவாகும், இது எங்களின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட Browser அனுபவத்தை இன்னும் எந்த Galaxy பாவனையாளரின் கைகளுக்கும் வழங்க அனுமதித்துள்ளது.

இயல்பான தனியுரிமை

Samsung Internet 17.0 ஆனது AI-powered Smart Anti-tracking செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இது இப்போது முன்னிருப்பாக இயக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவலைக் கண்காணிக்க முயற்சிக்கும் மூன்றாம் தரப்பினரைத் தடுக்க இந்த அம்சம் உதவும், மேலும் Samsung Internet 17.0இல் URLஐத் Type செய்யும் போது பாவனையாளர்கள் பாதுகாப்பான HTTPS அமைப்பை இயல்புநிலையில் பயன்படுத்தலாம். Smart Anti-tracking செயற்பாடு இயல்பாகவே இயக்கப்பட்டது.

தனியுரிமை செயல்பாடுகளுக்கு விரைவான மற்றும் எளிதான அணுகுமுறை

Samsung Internet 17.0 ஆனது பாவனையாளர்களுக்கு Samsung Browser அவர்களின் இணைய அனுபவத்தை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. Samsung Internet 17.0 உடன், விரைவான அணுகல் பக்கத்தின் வழியாக பாவனையாளரின் தனியுரிமை Dashboardஇன் Visual Snapshot கிடைக்கிறது. பாவனையாளர்களின் தனியுரிமை விருப்பங்களுக்கு ஏற்ப சரி செய்யக்கூடிய வாராந்திர செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளின் விரிவான பதிவை இது வழங்குகிறது.

பாவனையாளர்கள் விரைவு அணுகல் பக்கத்தில் தனியுரிமை Dashboardஐ சரிபார்க்கலாம்.

Samsung Internet 17.0 ஆனது SMS அல்லது App அடிப்படையிலான இரு காரணி அங்கீகாரத்திற்கு மாற்றாக வெளிப்புற பாதுகாப்பு அல்லது சாதனத்தில் உள்ள பாதுகாப்பு விசைகளைப் பயன்படுத்துவதற்கான வழியையும் வழங்குகிறது.

ஒரு மென்மையான, அதிக சக்திவாய்ந்த பாவனையாளர் அனுபவம்

Samsungகின் சமீபத்திய Browser புதுப்பிப்பில் அதன் ஒட்டுமொத்த பாவனையாளர் அனுபவத்தில் பல மேம்பாடுகள் உள்ளன, இதில் Drag மற்றும் குழுக்களுக்கு Drop tabs செய்வதற்கான திறன் உள்ளது. இது வழிசெலுத்தலையும் ஒழுங்கமைப்பையும் மென்மையாகவும் வேகமாகவும் செய்கிறது.

தாவல்களை குழுக்களாக வகைப்படுத்த Drag செய்து மற்றும் Drop செய்யவும்.

Samsung Internet 17.0 Bookmarkகள், வரலாறு மற்றும் சேமித்த பக்கங்களில் மேம்படுத்தப்பட்ட தேடல் அனுபவங்களைக் கொண்டுவரும். Browser பொதுவான பாவனையாளர் எழுத்துப்பிழைகளை அங்கீகரிக்கிறது மற்றும் Bookmarkகள் மற்றும் சேமித்த பக்கங்களின் அடிப்படையில் ஒரு தரவுத்தளத்திலிருந்து சொற்றொடர்கள் அல்லது வாக்கியங்களைக் கண்டறிய வார்த்தை அடிப்படையிலான பொருத்த வினவல்களை செயலாக்க முடியும். ஒலிப்புப் பொருத்தம், அவை ஒலிக்கும் விதத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சொற்களைத் தேடுவதையும் செயல்படுத்துகிறது, மேலும் ஐந்து மொழிகளின் சேர்க்கையுடன் மொழிபெயர்ப்புத் திறன்கள் அதிகரிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கையை 26ஆகக் கொண்டு வருகின்றன.

எப்போதும் உங்கள் சேவையில், எங்கும், எப்போது வேண்டுமானாலும். Samsung Galaxy Smartphoneஐ வாங்க நீங்கள் தேர்வு செய்யும் போது மன அமைதியை அனுபவிக்கவும். Samsung Members Appஇல் உள்ள Diagnostics கண்டறிதல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவை உங்கள் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் உங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும்போது எங்கள் ஹெல்ப்லைன் உங்களைச் சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.

இலங்கையில், Brand Finance Lankaவின் நாட்டின் மிகவும் பெறுமதியான வர்த்தக நாமங்களின் மதிப்பாய்வின் மூலம், Samsung ஆனது, தொடர்ந்து மூன்று வருடங்களாக அதிக விரும்பப்படும் இலத்திரனியல் வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் No;.1 ஸ்மார்ட்ஃபோன் பிராண்டாக, நாட்டில் ளுயஅளரபெ இன் வாடிக்கையாளர் தளம் அனைத்து வயதினருக்கும், குறிப்பாக Gen Z மற்றும் Millennial பிரிவுகளில் பரவியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு...

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு...