மே மாதம் இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது, இன்று 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலை மற்றும் மார்பில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பெரஹெர மாவத்தைக்கும் பெய்ரா ஏரிக்கும் இடையிலான நடைபாதையில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.