இலங்கைக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்குவதற்கான இந்தியாவின் கடன்தொகையை நீடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்திய சுகாதார நலத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வௌியிட்டுள்ளது,
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது,
அத்துடன் இலங்கைக்கு 273 வகையான மருந்து வகைகளை அனுப்பி வைப்பதற்கு இதன் போது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
எவ்வாறாயினும் வங்கி முறைமைகளின் உத்தரவாதத்திற்காக தற்போது இந்திய மருந்து ஏற்றுமதி நிறுவனங்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தியாவை இலங்கை போன்று மாற்றுவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.,
இந்தியாவில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியன இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்,
மேலும் இனங்களுக்கிடையிலான மோதல்களை ஊக்குவிப்பதும் இதற்கு காரணமாக அமையலாம் என அவர் கூறியுள்ளார்,
அத்துடன் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான அரசாங்கம் மக்களை உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.