முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இன்று புதன்கிழமை (18) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இருவரும் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமரும் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்ததன் மூலம் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
மே மாதம் 11 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்காலிகமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டதை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதிப்படுத்தினார்.
“அவர் அங்கே நிரந்தரமாக வாழமாட்டார். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, அவர் விரும்பிய குடியிருப்பு அல்லது இருப்பிடத்திற்கு மாற்றப்படுவார்,” என்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை பாதுகாக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.