நாடளாவிய ரீதியில், நாளைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகமான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம்3 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலும், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும் தலா 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.