கொழும்பு மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளும் மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கொழும்பு வுல்பெண்டால் வீதியின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளும் மக்கள் ஆர்ப்பட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
விறகு அடுப்பு மூட்ட முடியாது!
இடமும் இல்லை! விறகும் இல்லை!
ப்ளட் வீடுகளும், நெருக்கமான தோட்டங்களும்!
இலகுவாக தீப்பற்றி கொள்ளும் இடங்கள்!
மண்ணெண்ணை அடுப்பு வைக்கவும் முடியாது!
மண்ணெண்ணையும் இல்லை! அடுப்பும் இல்லை!
ஆர்ப்பட்டக்காரர்கள் இவ்வாறான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.