Date:

இலங்கையில் நிலவும் வன்முறை சம்பவங்கள் யாரால் மேற்கொள்ளப்பட்டது?

இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது

நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென அமைதியான முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த திங்களன்று அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுவந்தவர்கள் மீது சிலர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நாடளாவியரீதியில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடிக்க தொடங்கியதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ இராஜினாமா செய்ய நேரிட்டது.

பொதுச் சொத்துக்களைக் சேதம் வினைவிப்பவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள இராணுவத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

பல்லாயிரக்கணக்கான இராணுவம்இ கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்த போதிலும்இ கொழும்பு நகரில்  மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் மீது குண்டர்களால் தாக்கப்பட்டார்இ அவர் அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டில் இடம்பெரும் இவ்வாறான அசம்பாவிதமான சம்பவங்கள் காரணமாக   எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும்இ 249க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவளைஇ அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி தாக்குமாறு மகிந்த தனது ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கவனக்குறைவாக அறிவுறுத்தியதாக இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல சமூக அரசியல் ஆய்வாளருமான தர்ஷன ஹந்துங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதே நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்கஇ நாட்டின் நிராயுதபாணியான மக்களை வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...