வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை மீறி செயற்படும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.