Date:

ரணில் முன்வைத்த திருத்தம் சபாநாயகரால் நிராகரிப்பு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை, அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாக கருதவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அதேவேளை, அது தொடர்பான வாக்கெடுப்பும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும்...

’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும்...

நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை...