எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடங்கள் தொடர்பான ஆலோசனைகள், கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன அறிவித்துள்ளார்.