ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 7 மணித்தியாலங்களுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள் மாத்திரம் டிப்போ மட்டத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், தூரப் பிரதேசங்களுக்கான பஸ் சேவைகளை முன்னெடுக்காது இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், மாகாணங்களுக்குள் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், மாகாணங்களுக்கு இடையில் எந்த விதமான பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.