இரண்டு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்படவில்லை என்றால் தான் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.