Date:

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரேமதாச பதவியேற்பார்- லக்‌ஷ்மன் கிரியெல்ல

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமராக பதவியேற்கத் தயாராகவே இருக்கின்றார் என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்‌சவை போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவும் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இருக்கின்றார் என்றும் கிரியெல்ல கூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...