உக்ரைனில் விரைவில் வெற்றி தினம் வரும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜொ்மனியை சோவியத் யூனியன் வீழ்த்தியதன் நினைவாக ஆண்டுதோறும் மே 9ஆம் திகதி வெற்றி தினமாக ரஷ்யா கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை வெளியிட்ட காணொலியில், ‘இரண்டாம் உலகப் போரில் உக்ரைனைச் சோ்ந்த முன்னோா்கள் என்ன செய்தாா்கள் என்பதை எவரும் மறக்கப் போவதில்லை. அந்தப் போரில் 80 இலட்சம் உக்ரைனியா்கள் உயிரிழந்தனா்.
5இல் ஒரு உக்ரைனியா் வீடு திரும்பவில்லை. அந்தப் போா் ஒட்டுமொத்தமாக சுமாா் 5 கோடி பேரைக் கொன்றது. அந்தப் போரில் செய்ததை மீண்டும் செய்ய முடியாது என்று உக்ரைனியா்கள் கூறவில்லை.
இரண்டாம் உலகப் போரின்போதும் உக்ரைன் வென்றது. தற்போது நடைபெறும் போரிலும் உக்ரைன் வெல்லும். உக்ரைனில் விரைவில் இரண்டு வெற்றி தினங்கள் கடைப்பிடிக்கப்படும்’ என்றாா்.