Date:

Breaking நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்களுக்கும் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அலரிமாளிகைக்கு வெளியிலும், கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது SLPP ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, SLPP ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அலரிமாளிகைக்கு முன்னால் உள்ள ‘மைன கோ கம’ போராட்டத் தளம் மற்றும் ‘கோத கோ கம’ போராட்டத் தளம் இரண்டையும் அழித்துள்ளனர். கொழும்பு காலி முகத்திடலில்.

அரசாங்க எதிர்ப்பு மற்றும் SLPP ஆதரவாளர்களுக்கு இடையிலான அமைதியின்மை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பகுதிகளில் முதலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், அது மேல் மாகாணத்திற்கும் நீடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...