இன்று கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கண்டனம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு (BASL) கம்புகள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அலரிமாளிகையில் இருந்து காலி முகத்திடலை நோக்கி அணிவகுத்துச் செல்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், அலரிமாளிகை எதிரே அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க BASL அழைப்பு விடுக்கிறது என்று சாலிய பீரிஸ் கூறினார்.
இந்தச் சூழலைச் சமாளிக்க அரசும், காவல்துறையும் மெத்தனப் போக்கை கடைபிடித்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள், அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘மைன கோ கம’ மற்றும் காலி முகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘கோத கோ கம’ ஆகிய இடங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கி, எதிர்ப்பு தொடர்பான பல பொருட்களை அழித்ததை அடுத்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். .
இன்று காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் இரண்டு போராட்ட தளங்களையும் அழித்துள்ளனர்.